திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2017 (16:08 IST)

கடன் தொல்லையை சமாளிக்க மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்..

கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க கணவனே மனைவியை கொன்றுவிட்டு, கூலிப்படை மீது கொன்றாக நாடகமாடிய விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
டெல்லி பகர்பஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் பங்கஜ் மெஹ்ரா. இவரது மனைவி பிரியா மெஹ்ரா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த செவ்வாய் கிழமை இரவு இடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத சில நிபர்கள் பிரியாவை சுட்டுக்கொன்று விட்டதாக பங்கஜ் மெஹ்ரா போலீசாரிடம் புகார் அளித்தார்.
 
மேலும், தான் தொழில் தொடர்பாக பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனதால், கடன் கொடுத்தவர்கள் கூலிப்படையை ஏவி தனது மனைவியை கொன்று விட்டதாக அவர் போலீசாரிடம் கூறினார்.
 
ஆனால், போலீசாரின் விசாரணையில், அவர் கடன் பெற்றது உண்மைதான். ஆனால், அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில், மனைவியை கொன்று, அந்த பலியை கடன் கொடுத்தவர்கள் மீது சுமத்தலாம் என அவர் திட்டமிட்டது தெரியவந்தது. இதை மெஹ்ராவும் ஒப்புக்கொண்டுவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விவகாரம் அவர்கள் வசித்து வந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.