Last Updated : புதன், 21 டிசம்பர் 2016 (16:51 IST)
டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் விபத்து: அதிர்ச்சி வீடியோ!
கொலம்பியா நாட்டில் ஜெர்மன் ஒலானோ விமான நிலையத்தில் இருந்து ஆறு பேருடன் கிளம்பிய கார்கோ விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெர்மன் ஒலானோ விமான நிலையத்தில் இருந்து ஆறு பேருடன் கிளம்பிய விமானம் டேக் ஆஃப் ஆகும்போது ரன் வேயைத் தாண்டி ஓடியது. பின்னர் சற்றும் எதிபாராத விதமாக தாழ்வாகப் பறந்த விமானம் சில நிமிடங்களில் கீழே விழுந்தது.
இந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர். இந்த விபத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.