வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (13:33 IST)

கோவையில் இளைஞர் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை! – கோர்ட்டு முன்னர் நடந்த கொடூரம்!

கோவையில் நீதிமன்றத்திற்கு வந்த இருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் கோகுல் மற்றும் மனோஜ். நண்பர்களான இவர்கள் இருவர் மீது வழக்கு ஒன்று இருந்த நிலையில் அந்த வழக்கில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

கையெழுத்து போட்டு விட்டு நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள டீக்கடை ஒன்றில் நின்று அவர்கள் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அவர்களை சுற்றி வளைத்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க தொடங்கியுள்ளனர்.

கோகுலை கழுத்தில் கத்தியால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். தடுக்க போன மனோஜையும் மோசமாக தாக்கிய அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் கோகுலையும், மனோஜையும் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

ஆனால் சம்பவ இடத்திலேயே கோகுல் இறந்துவிட்ட நிலையில் மனோஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நீதிமன்றம் முன்னர் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோகுலை கொன்ற மர்ம நபர்கள் யார்? முன் விரோதத்தால் இந்த கொலை நடத்தப்பட்டதா? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K