1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 ஜூலை 2018 (17:19 IST)

அமெரிக்காவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாராட்டு விழா

அமெரிக்காவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு  பாராட்டு விழா
கேரளாவில் நிபா வைரஸை விரைவில் கட்டுப்படுத்திய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அமெரிக்க பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் பாராட்டு விழா நடத்தி கவுரவித்துள்ளது.
கேரளாவில் பரவிய நிபா வைரசால் 18 பேர் மரணமடைந்தனர். பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் நிபா வைரஸ் தொற்று முழுவதும் ஒழிக்கப்பட்டது.
அமெரிக்காவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு  பாராட்டு விழா
இந்நிலையில் நிபா வைரஸை தடுக்க சிறப்பாக செயல்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயனையும், சுகாதாரத்துறை மந்திரி சைலஜா டீச்சர் ஆகியோருக்கும் அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் பாராட்டுவிழா நடத்தி கௌரவித்தது. இதில், பினராயி விஜயன் மற்றும் சைலஜா டீச்சர் கலந்து கொண்டு  கேரளாவில் நவீன வைராலஜி இன்ஸ்டிடியூட் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.