நீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் போட்ட முதலை – அதிர்ச்சியடைந்த பெண்

alligator
Last Modified ஞாயிறு, 28 ஜூலை 2019 (13:27 IST)
அமெரிக்காவில் நீச்சல் குளத்திற்குள் புகுந்து நீச்சல் போட்டுக்கொண்டிருந்த முதலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெண், அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழ்ந்து வருபவர் கெரி கிபே. இவர் நேற்று இரவு நன்றாக தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அப்போது வித்தியாசமான சத்தம் கேட்பதை உணர்ந்து விழித்திருக்கிறார். எங்கே சத்தம் கேட்கிறது என்று பார்த்தவாறே சென்றவருக்கு அதிர்ச்சி.

அவர் குளிக்கும் நீச்சல் குளத்தில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை ஒன்று நீந்திக் கொண்டிருந்தது. பயத்தில் ஒரு நிமிடம் உறைந்து நின்ற அவர் உடனடியாக முதலை பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அந்த முதலையை பிடித்து சென்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :