ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதல் – 20 தலீபான் தீவிரவாதிகள் பலி

air force
Last Modified ஞாயிறு, 28 ஜூலை 2019 (11:54 IST)
ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி அதிரடி தாக்குதலில் 20 தலீபான் தீவிரவாதிகள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க கூட்டு படையுடன் இணைந்து தலீபான்களை ஒடுக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சமீப காலமாக தலீபான்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சித்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக பேச்சு வார்த்தை முயற்சியை நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தின் மட்வார்டா மற்றும் சயத் வாலி பகுதிகளில் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தலீபான் தீவிரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கன் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இதில் மேலும் படிக்கவும் :