புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:37 IST)

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோழியை அடித்து நொறுக்கிய நடிகர்

ரஷ்யாவில் நடிகர் ஒருவர் தொலைகாட்சி  நிகழ்ச்சியில் தனது தோழியை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் டோங்டு என்ற தொலைக்காட்சி தொடர் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சி அது. இதில் பங்கேற்ற ஷபாரின் என்ற நடிகர் தனது தோழி ரோசாலியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போனதால், கடுப்பான அந்த நடிகர் தனது தோழியான ரோசாலியை கடுமையாக தாக்க தொடங்கிவிட்டார். சக போட்டியாளர் ஒருவர் அதனை தடுக்க முடிந்தும் அது முடியவில்லை.
 
இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வந்து அந்த சண்டையை விலக்கி அந்த நடிகரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். இச்சம்பவம் ரஷ்யாவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.