திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (17:50 IST)

தளபதி 63 அப்டேட்ஸ்: விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர் யார்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 63 படத்தில் பாலிவுட் நடிகரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் தபதி 63 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பூஜையுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இப்படம் முழுக்க விளையாட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் நடிக்க விவேக், யோகி பாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இப்படம் 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
 
தற்போது படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தில் இணையும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் , இப்படத்தில் இந்தி நடிகர் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 
மேலும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் `பைரவா’ படத்தில் நடித்திருந்த 
டேனியல் பாலாஜியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.