புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (20:04 IST)

இது என்ன தசாவதாரம் படமா? கமல்ஹாசனை தாக்கும் பிரபல நடிகர்

இது என்ன தசாவதாரம் படமா? கமல்ஹாசனை தாக்கும் பிரபல நடிகர்
டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியபோது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டிய நடிகர் கமலஹாசன், அதே நேரத்தில் அரசு மெத்தனமாக நிவாரண பணிகளை செய்து வருவதாக குறை கூறினார். ஒருசில கிராமங்களுக்கு சென்று திரும்பிய கமல்ஹாசன் வழக்கம்போல் தனது டுவிட்டரில் அரசை டுவீட் மூலம் குறை சொல்ல ஆரம்பித்தார்

இந்த நிலையில் கமல்ஹாசனின் விமர்சனத்தை நடிகர் ரித்தீஷ் குறைகூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலின்போது உயிரிழப்பு குறைந்துள்ளது. கடுமையான சேதத்திலிருந்து மக்களை மீட்க அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், நடிகர் கமல்ஹாசன், புயல் பாதித்த 15 நாட்களுக்குப்பின் மக்களை சந்தித்தார். மக்களுக்கு ஆறுதல் கூறாமல் அரசை பற்றி விமர்சனம் செய்கிறார். தசாவதாரம் படத்தைப் போன்று எதையும் செய்துவிடுவது சினிமாவில் மட்டுமே முடியும்.

இது என்ன தசாவதாரம் படமா? கமல்ஹாசனை தாக்கும் பிரபல நடிகர்
மிகப்பெரிய இயற்கை பேரழிவிலிருந்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பச் செய்யும் அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்ததால் மக்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். கமல்ஹாசனின் விமர்சனம் திரையுலகத்தினருக்கு மனவேதனையை அளிக்கிறது

இவ்வாறு நடிகர் ரித்தீஷ் தெரிவித்தார்.