புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 30 நவம்பர் 2018 (16:17 IST)

சக நடிகர்களின் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட ரியாமிகா! - வெளியானது பகீர் உண்மை

இளம் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம், திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், அகோரியின் ஆட்டம், எக்ஸ் வீடியோஸ் படங்களில் நடித்த நடிகை ரியாமிகா(26), சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
ரியாமிகா தற்கொலை செய்து கோடதற்கான காரணம், காதலருடன் ஏற்பட்ட பிரச்சனை என்று கூறப்பட்டதே தவிர வேறு எந்த காரணமும் வெளிவராத நிலையில், போலீசாரின் அடுத்த கட்ட விசாரணையை நடத்தினர் , அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
 
அதாவது, இவர் தொடர்ந்து திரைப்படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருவதாக கூறி இவரை, சக நடிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்ததாகவும், இப்படியெல்லாம் நடித்தால் பட வாய்ப்புகள் கிடைக்காது என கூறியதாகவும் கூறப்படுகிறது.
 
 இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நடிகை ரியாமிக்கா தற்கொலை முடிவுக்கு வந்திருக்கலாம் என இரண்டாம் கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.
 
மேலும், இது குறித்து அவருடைய சகோதரரிடம் விசாரித்த போது,  " ரியாமிகா காலை நேரத்தில்  மிகவும் சோர்வாக வந்தார். வந்து சக நடிகர்கள் தன்னை பற்றி விமர்சித்து பேசுவதாக வேதனையோடு பேசினார், பின்பு தூங்க சென்றுவிட்டார்.
 
இதே போல் இவருடைய காதலர் தினேஷிடம் விசாரித்தது போது... "ரியாமிக்கா, ஜிம்மிற்கு வந்தபோது அவருக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின் அது காதலாக மாறியது. "தனக்கும் ரியாமிகாவிற்கும் சாதாரண காலர்களுக்குள் ஏற்படும் பிரச்சனை தான் இருந்தது. அவர் இரவு நேரத்தில் நண்பர்களுடன் வெளியில் சுற்றுவது பிடிக்காமல் அவரை கண்டித்தது உண்மை ஆனால் அவர் அதற்கு தன்னிடம் கோவம் கொண்டதால் நான் அவரிடம் சரியாக பேசுவது இல்லை. 
 
இருந்த போதிலும் , ரியாமிகா தற்கொலை செய்து கொண்ட அன்று காலை அவருடைய வீட்டிற்கு வந்தேன் அவர் தூங்கி கொண்டிருப்பதாக அவருடைய சகோதரர் கூறியதால் ரியாமிகாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.
 
மாலை ரியமிகாவை சந்திக்க நான் வீட்டிற்கு போன போதும் அவருடைய அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து நானும் அவருடைய சகோதரம் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, ரியாமிகா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார் அதை பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.
 
ஆனால் ரியமிகா அப்படிப்பட்ட பெண் இல்லை, அவர் மிகவும் தைரியமான பெண். சக நடிகர்களின் வார்த்தைக்காக இந்த தற்கொலை முடிவை எடுக்க வாய்ப்பு இல்லை. ரியாமிகா தற்கொலையில் வேறு எதோ மர்மம் உள்ளது என அவரது குடும்பத்தியனர் கூறியுள்ளனர். 
 
இதனால் தற்போது போலீசார்,  ரியாமிகா தற்கொலை செய்வதற்கு முதல் நாள் இரவு முழுவதும் எங்கு இருந்தார் என்பது பற்றியும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
இன்னும் இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என சந்தேகிக்கப்படுகிறது.