1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (11:16 IST)

அமெரிக்காவில் திருடர்களால் சுட்டுக்கொள்ளப்பட்ட இந்தியர்

அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாணத்தில் கொள்ளையர்களால் சுடப்பட்ட இந்தியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவில்  உள்ள ஓகியோ மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த கருணாகர் காரெங்கிள் (வயது 53) என்பவர் அங்குள்ள  பிரொவிஷ்னல் ஸ்டோர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 11-ந் தேதி இரவு 10 மணியளவில் கடைக்குள் புகுந்த இரண்டு திருடர்கள், அங்கிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அவர்களை தடுக்க கருணாகர் முயற்சித்தார், கோபமடைந்த திருடர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் மீது சரமாரியாக சுட்டனர். இதில் கருணாகர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
 
இது குறித்து தகவலறிந்த பேர்பீல்டு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த கருணாகரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.