பாகிஸ்தான் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: அமெரிக்கா!
அமெரிக்கா அரசு தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உள்ளதாக கூறி சில வெளிநாட்டு நிறுவனங்களை பட்டியலிட்டு அதனை தடை செய்து உள்ளது.
அந்த வகையில், பாகிஸ்தானை சேர்ந்த 7 நிறுவனங்கள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் அணு வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறி பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த பட்டியலில் மொத்தம் 23 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் நிறுவனங்களை தவிர்த்து தெற்கு சூடானை சேர்ந்த 15 நிறுவனங்களும் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனமும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தற்போது அமெரிக்கா இந்த பட்டியலில் சேர்த்துள்ளதன் மூலம், குறிப்பிட்டுள்ள 23 நிறுவனங்களும் கடுமையான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.