திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜனவரி 2020 (14:56 IST)

இனிமேலும் உன்ன சும்மா விட்ருவோமா? ஈரானுக்கு பொருளாதார தடை! – அமெரிக்கா அதிரடி

உக்ரைன் விமானத்தை தாக்கியதாக ஈரான் ஒத்துக்கொண்டுள்ள நிலையில் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது அமெரிக்கா.

அமெரிக்கா ராணுவம் ஈரான் தளபதி சுலைமானியை ஈராக்கில் தாக்குதல் நடத்தி கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ராக்கெட்டுகளால் தாக்கியது ஈரான். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது டெஹ்ரானிலிருந்து உக்ரைன் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் தவறுதலாக தாக்கப்பட்டது.

பூமியில் மோதி வெடித்து சிதறிய விமானத்தில் பயணித்த 127 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது ஈரான்.

இந்நிலையில் ஈரானின் தாக்குதலை கண்டித்து ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. இந்த பொருளாதார தடையால் பல நாட்டு வணிகங்கள் பாதிக்கப்படும் சூழல் இருக்கும் நிலையில், ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சிகளை முறியடிக்கும் வேலையிலும் அமெரிக்க ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.