வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (11:37 IST)

ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

governor
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது கடந்த சில மாதங்களாக திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. 
 
ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran