திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (11:38 IST)

வீடு தேடி வரும் முக்கிய மருந்துகள்... அமேசான் நிறுவனத்தின் புதிய திட்டம்

Amazon
அமெரிக்காவில் மாதம் 5 டாலர் கட்டணம் செலுத்தினால் மருந்துகள் வீடு தேடி வரும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
அமெரிக்க அமேசான் மருந்தகத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய போது நீரிழிவு ரத்த அழுத்தம் தலையில் முடி கொட்டுதல் போன்ற நீண்ட கால நோய்களுக்கு மருந்துகளை வீடு தேடி வழங்கும் திட்டத்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்
 
50 முக்கிய மருந்துகளை வீடு தேடி வழங்குவதற்கு மாதம் 5 டாலர் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்றும் இந்த வசதியை விரும்பும் வாடிக்கையாளர்கள் மெடிகேர்,மெடிக்கைட், போன்ற அரசு சுகாதாரத் திட்டங்களில் இணைந்திருப்பது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran