போட்டோஷாப் படித்தவர்களுக்கு சோலி முடிஞ்சுருச்சு.. ChatGPT டெக்னாலஜி அபாரம்..!
போட்டோ ஷாப்பில் மணிக்கணக்கில் செய்யும் வேலையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ChatGPT ஒரு சில நொடிகளில் செய்து முடித்து விடுவதால் போட்டோஷாப் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு இனி பரிபோக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில் என்னென்ன மாற்றம் செய்ய வேண்டும் என ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜியில் கூறியவுடன் அது உடனே அந்த மாற்றத்தை செய்து கொடுக்கிறது.
இந்த மாற்றத்தை போட்டோ ஷாப் கலைஞர் ஒருவர் செய்ய வேண்டும் என்றால் மணி கணக்கில் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ChatGPT ஒரு சில நொடிகளில் இந்த வேலையை முடித்து ஒட்டுமொத்தமாக அந்த புகைப்படத்தை மாற்றி விடுகிறது.
இந்த வீடியோ போட்டோஷாப் படித்தவர்களுக்கும் போட்டோஷாப்பில் வேலை செய்பவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெக்னாலஜி போட்டோஷாப் படித்தவர்களின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பை பறிபோக செய்து விடும் என்றும் கூறப்படுகிறது.
https://www.instagram.com/p/CszEprSsjmx/
Edited by Siva