வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (17:12 IST)

கவாஜா சதம்; புவி 3 விக்கெட்– இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸி அணி இந்தியாவுக்கு ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20  மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்  தொடரின் முதல் நான்குப் போடிகளிலும் இரு அணிகளும் தலா இருப் போட்டிகளில் வெற்றி  பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதையடுத்து இன்று 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று தொடங்கி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் உஸ்மான் கவாஜா சிறப்பான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். பிஞ்ச் 27 ரன்களில் ஜடேஜா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் சிறப்பாக விளையாடிய ஹான்ஸ்கோம்ப் அரைசதமும் கவாஜா 100 ரன்களும் சேர்த்து அவுட் ஆகி வெளியேறினர்.

அதன் பின்னர் வந்த மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், ஸ்டாய்னஸ் மற்றும் டர்னர் தலா 20 ரன்களும் கேரி 3 ரன்களும் சேர்த்து வெளியேறினர். கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த ரிச்சர்ட்ஸன் மற்றும் பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க ஸ்கோர் சிறிது உயர்ந்தது. இதனால் ஆஸி அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது.

இந்தியா சார்பில் புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்களும், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.  குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.