ராணுவத் தொப்பிக்கு இல்லை தடை – ஐசிசி ஒப்புதல் !

Last Modified செவ்வாய், 12 மார்ச் 2019 (17:11 IST)
இந்திய வீரர்கள் தங்கள் நாட்டின் ராணுவ தொப்பி அணிந்து விளையாட ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20  மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்  தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையில் நடந்த மூன்றாவது போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. அந்தப் போட்டியில் சமீபத்தில் நடந்த புல்வாமாத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் தங்கள் தொப்பிகளுக்குப் பதிலாக ராணுவ தொப்பிகளை அணிந்து விளையடினர். மேலும் அந்தப் போட்டியின் ஊதியம் முழுவதையும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு அளிப்பதாக முடிவு செய்தனர். மேலும் வருடம்தோறும் ஒருப் போட்டியில் ராணுவத் தொப்பி அணிந்து விளையாட பிசிசிஐ முடிவு செய்திருந்தது.

இந்திய அணியினர் இந்த முடிவை பாகிஸ்தான் அமைச்சர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) வலியுறுத்தினர். மேலும் ஜெண்டில் மேன்களின் விளையாட்டு என்று அழைக்கப்பட்ட கிரிக்கெட்டை இந்தியா அரசியல் படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர். இதனிடையே ராணுவ தொப்பி அணிந்து விளையாட அனுமதி தருமாறு ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கோரிக்கை விடுத்திருந்தது. இது சம்மந்தமாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் படி இறந்த ராணுவ வீரர்கள் நினைவாக ராணுவ தொப்பியை இந்திய அணி வீரர்கள் அணிந்து விளையாடலாம். இதற்கு ஐசிசி அனுமதி அளிக்கிறது. இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



இதில் மேலும் படிக்கவும் :