செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 டிசம்பர் 2018 (08:36 IST)

ஒரே இன்ஜெக்ஷன்: வீங்கிப்போன இளம்பெண்ணின் உதடு

இங்கிலாந்தில் ஒரே ஒரு ஊசியால் இளம்பெண்ணின் உதடுகள் வீங்கிப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இங்கிலாந்தை சேர்ந்த ரேச்சல் என்ற இளம்பெண் ஒருவர் தனது தோழி வீட்டில் இருந்து உதட்டை அழகுபடுத்தும் ஊசி ஒன்றை தனது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அதை எடுத்து வரும்போதே ஊசியை போட்டதும், ஐஸ்கட்டியை உதட்டில் வைக்க வேண்டும் என ரேச்சலிடம் அவரது தோழி கூறினார்.
 
இதற்கிடையே வீட்டிற்கு வந்த ரேச்சல் அந்த ஊசியை தனது உதட்டில் செலுத்தினார். ஊசி போட்ட சில வினாடிகளில் அவரது உதடு வீங்கத் தொடங்கியது. இதனால் அதிர்ந்து போன அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்.
 
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உதட்டிற்கு ஐஸ்கட்டி ஒத்தனம் செய்தனர். சிறிது நேரத்தில் அவரது பிரச்சனை தீர்ந்தது. பதற்றத்தில் தனது தோழி சொன்னதை மறந்து தானும் டென்ஷனாகி மற்றவர்களையும் டென்ஷன் ஆக்கிவிட்டார் ரேச்சல்.