நேர்மையற்ற மனிதர்கள் பட்டியலில் மோடி, ராகுல் காந்தி: ஆம் ஆத்மியின் சர்ச்சை அறிவிப்பு..!
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நேர்மையற்றவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.
டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது என்பதும் இங்கே தீவிரமாக தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்தாலும், டெல்லி தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று ஆம் ஆத்மி கட்சி கட்சி நேர்மையற்றவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன. இதன் மூலம் ராகுல் காந்தியை ஆம் ஆத்மி கட்சி நேரடியாக தாக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில் தற்போது தனித்தனியாக போட்டியிடுவதால் இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சனம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva