1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (11:41 IST)

செல்பி மோகம்: 27வது மாடியிலிருந்து விழுந்து உயிரை விட்ட இளம்பெண்

போர்ச்சுகலில் பெண் ஒருவர் 27 வது மாடியில் செல்பி எடுத்த போதி கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பி எடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.
 
இந்நிலையில் போர்ச்சுகலை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 27 வது மாடியில் வசித்து வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
 
அந்த பெண் தனது வீட்டு பால்கனியில் செல்பி எடுத்துள்ளார். சற்றே ஆர்வக்கோளாறில் பால்கனியில் இருந்த கம்பியில் மேல் அமர்ந்தவாறு போட்டோ எடுக்க முயற்சித்திருக்கிறார். அப்போது பேலன்ஸ் தவறி 27 வது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
செல்பி மோகத்தல் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.