சேலத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு...

salem macid
Last Updated: திங்கள், 15 அக்டோபர் 2018 (19:01 IST)
சேலம் மாவட்டத்தை சேர்ந்த காயத்ரி என்ற பெண் மீது அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இது சம்பவம் குறித்து அறிந்த செய்தியாளார்கள் பலரும் காயத்திரியைசிகிச்சைக்காக  சேர்த்திருக்கும் சேலத்திலுள்ள மருத்துவமனைக்கு சென்று பேட்டி கண்டனர். அப்போது அவர் காயத்தினால் ஏற்பட்ட வேதனைக்குரலுடன் கூறியதாவது:
 
’நான் சீனிவாசனுடன் சில நாட்களாக பேசவில்லை என்பதற்காக அவர் ஆத்திரமடைந்து என் மீது ஆசிட் வீசியுள்ளார்.’ என  அவர் படுக்கையில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பரிதாபமாக கூறினார்.
 
இதனையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய சீனிவாசனை தீவிரமாக தேடிவரிகின்றனர்.  
 
சேலத்தில் பட்டப்பகலில் அதுவும் ஜனங்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழந்த ஆசிட் வீச்சு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :