தொடர்புடைய செய்திகள்
- குரங்கணி காட்டுத்தீ அல்ல; தீ வைத்தது இவர்களே: சர்ச்சையை கிளப்பும் டிரெக்கிங் கிளப்...
- அனுமதி பெற்றே அழைத்து சென்றோம் - சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம்
- குரங்கணி காட்டுத்தீ அல்ல; தீ வைத்தது இவர்களே: சர்ச்சையை கிளப்பும் டிரெக்கிங் கிளப்...
- சட்டம் ஒழுங்கு, காவிரிப் பிரச்னை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய ரஜினி
- பயணி தவறவிட்ட ரூ.15 ஆயிரத்தை நேர்மையுடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
மனைவிக்கு கார் ஓட்ட பழகியபோது விபத்து! பரிதாபமாக பலியான சிறுமி
சென்னையில் கணவர் ஒருவர் தனது மனைவிக்கு கார் ஓட்ட பழகி கொடுத்த கொண்டிருந்தபோது அந்த கார் எதிர்பாராதவிதத்தில் சிறுமி மீது மோதியதால் அந்த சிறுமி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த டெனி என்பவர் தனது மனைவி ப்ரித்திக்கு கார் ஓட்ட கற்று கொடுத்து கொடுத்து கொண்டிருந்தார். அப்போது ப்ரித்தி திடீரென சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமி பவித்ராவின் மீது மோதினார்.
இதில் பலத்த காயமடைந்த பவித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை தொடங்கும் முன்பே மரணம் அடைந்தார். இந்த நிலையில் பவித்ரா மீது காரை ஏற்றிய டெனி, ப்ரித்தி தம்பதியை அந்த பகுதி மக்கள் பிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். ப்ரித்தி கார் ஓட்ட பயின்று கொண்டிருந்தபோது திடீரென பதட்டத்தில் ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சிறுமி மீது மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
