1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 செப்டம்பர் 2018 (12:29 IST)

பிக்பாஸ் செட்டில் விபத்து, ஒருவர் பலி: இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் மூன்று வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடிந்துவிடும் என்பதால் போட்டியாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தபோது திடீரென ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டில் இன்று கமல்ஹாசன் தோன்றும் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ஏசி மெக்கானிக் ஊழியர் ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து பின்னர் மரணம் அடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 
எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் ஒவ்வொரு நாளும் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் புரமோ வீடியோவும் இன்று இதுவரை வெளிவரவில்லை. இதனால் இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்புவதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று விஜய் டிவி வட்டாரங்கள் கூறுகின்றன.