உலகின் மிக வயதான பெண்மனி 117 வயதில் மரணம்

old
Last Modified வெள்ளி, 27 ஜூலை 2018 (15:19 IST)
உலகின் மிக வயதான பெண்மணி தனது 117 வயதில் மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன காலக் கட்டத்தில் பலர் 60 வயதை அடைவதற்கு முன்பே இறந்துவிடுகின்றனர். அப்படி இருக்கும் வேளையில் மூதாட்டி ஒருவர் 117 வயது வரை வாழ்ந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜப்பானைச் சேர்ந்த சியோ மியோகோ என்பவர் 1901 ஆம் ஆண்டு பிறந்தார். 117 வயதாகிய அவர் மிகவும் அன்பானவர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 
117 வயது வரை உயிருள்ள முதல் பெண்மணி என  சியோ மியோகோவை கின்னஸ் அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க இருந்த நிலையில் மியாகோ மரணம் அடைந்திருக்கிறார். இது அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :