திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (21:45 IST)

சென்ராயனுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி; கமலின் வாய்ச்சொல் பலித்த அதிசயம்...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கமல் வருவதால் ஒருவித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறார். மேலும் ரசிகர்களின் அனைத்து கேள்விகளை கேட்டு ரசிக்கும்படி செய்துவிடுவார்.
சென்ராயன், பிக்பாஸ் 2வது சீசனில் மிகவும் வெகுளியாக சுற்றுவரும் ஒரு நபர். வார இறுதியில் கமல்ஹாசன் வந்தால் மட்டும் இவரது முகத்தில் அப்படி ஒரு  பிரகாசம் வரும்.
 
இந்நிலையில் கடைசியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி சென்ராயன் தனது நீண்ட வருடங்களாக குழந்தை இல்லை என்று கூறியிருந்தார், அதோடு குழந்தை தத்தெடுக்க விரும்புவதாகவும் தனது ஆசையை வெளிப்படுத்தினார். இதை கேட்ட கமல், சென்ராயனிடம் இதை மட்டும் செய்யுங்கள், அடுத்த வருடமே உங்கள்  மனைவி கர்ப்பமாவார் என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது சென்ராயன் மனைவி கயல்விழி கர்ப்பமாக இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகுதான்  மருத்துவர் இதை உறுதி செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த சந்தோஷ விஷயத்தை அவருக்கு தெரியப்படுத்தினால் நிகழ்ச்சி விட்டு வெளியே வந்துவிடுவார்  என்றும், பிக்பாஸிலிருந்து வெளிவரும் நாளில் அவரிடம் மிகவும் சர்ப்ரைஸாக கூற இருப்பதாகவும் கயல்விழி தெரிவித்துள்ளார்.