செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (11:33 IST)

ஷிகெல்லா வைரசால் 2 வயது குழந்தை பலி - கேரளாவில் அதிர்ச்சி

நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் வேகமாக பரவி வரும் ஷிகெல்லா வைரசால் 2 வது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு பரவிய நிபா வைரசால் 17 பேர் உயிரிழந்தனர். கேரள அரசின் அதிரடி நடவடிக்கைகளால் நிபா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
 
இந்நிலையில் கேரளாவில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால், ஷிகெல்லா என்னும் வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். தற்பொழுது ஷிகெல்லா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜியான் என்ற 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. இச்சம்பவம் கேரள மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
 
ஷிகெல்லா வைரசை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.