வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (16:23 IST)

அனல் காற்றை இயற்கை பேரழிவாக அறிவித்த ஜப்பான் அரசு!

ஜப்பான் நாட்டில் ஜூலை 9 ஆம் தேதியிலிருந்து தற்போது வரை வெயிலுக்கு 65 பேர் பலியாகியுள்ளனர். 22,000 மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
ஜப்பான் நாட்டின் கிழக்கு ஆசியப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுக்கிறது. மேலும் அனல் காற்று வீசி வருகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் மத்திய டோக்கியோ பகுதியில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வதைத்ததால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் வெளியில் வரமல் வீட்டிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். எனவே, ஜப்பான் அரசு இதனை இயற்கை பேரழிவாக அறிவித்துள்ளது. அதோடு, பகல் நேரங்களில் மக்கள் வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது. 
 
முன்னதாக ஜப்பான் நாட்டின் பலத்த மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து தற்போது கடுமையான வெயில் வாட்டி வருவதால் பருவநிலை மாற்றம் குறித்து மக்கள் கவலையில் உள்ளனர்.