1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 6 மே 2023 (21:03 IST)

காங்கோவில் திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு...176 பேர் உயிரிழப்பு

congo
ஆப்பிரிக்க நாட்டின் காங்கோவில் திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 176க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கிழக்கு காங்கோவில் ஃபெலிக்ஸ் திஷிக்கேஷி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள தெற்கு கிவு மாகாணத்தில்  நேற்றிரவு திடீரென்று மழை பெய்தது. அப்போது, அங்குள்ள ஆறுகள் நீர்ப்பெருக்கெடுத்து ஓடியதால், வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கின.

இங்கு வசித்து வந்த மக்களும் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறாது.  மேலும், அப்பகுதியில் உள்ள சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரியில் புதைத்தும் சுமார் 176 பேர் உயிரிழந்துள்ளதாக தகவ வெளியாகிறது.

மேலும், 100க்கும் மேற்பட்ட மக்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.  வெள்ளத்தில் பலியான மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திங்களன்று தேசிய துக்கம் தினம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.