1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2024 (16:44 IST)

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மைநீக்கம்: அமலுக்கு வந்தது புதிய சட்டம்..!

கோப்புப் படம்
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என மடகாஸ்கர் நாட்டில் புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் சிறுவர் சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை அடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கிழக்கு மடகாஸ்கர் என்ற நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
இதன் படி நாட்டின் சட்டத்துறை அமைச்சர் இது குறித்து கூறிய போது  சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த மசோதா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மேல் சபையில்  தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி இனிமேல் சிறுமிகளை பாலியல் பலாத்காரம்  செய்வது உறுதி செய்யப்பட்டால்  அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran