1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (15:24 IST)

பரோலில் வந்து தாய், மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி.. அதிர்ச்சியில் போலீஸ்..!

கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவர் பரோலில் வந்து தாய் மற்றும் மகள் ஆகிய இருவரையும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பரத் கோஸ்வாமி என்பவர் கொலை வழக்கில் ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் பரோலில் வெளிவந்த நிலையில் தனக்கு ஏற்கனவே தெரிந்த நாற்பத்தி மூன்று வயது பெண்ணிடம் சென்று அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.
 
அதன் பிறகு அடுத்த நாள் அந்த பெண்ணின் 14 வயது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். பரோலில் வெளிவந்து அம்மா மகள் என இருவரையும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து அவரை மீண்டும் போலீசார் கைது செய்தனர். இது போன்ற கொடுமையான குற்றவாளிகளை எதற்காக பரோலில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்
 
Edited by Siva