1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (11:38 IST)

விவசாயம் செழிக்கவேண்டி சிறுவர் சிறுமிகள் மட்டும் செய்யும் வினோத நேர்த்திக்கடன்!

முத்தூர் கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி சிறுவர்கள் சிறுமிகள் மட்டும் மார்கழி மாதம் முழுவதும் வினோத நேர்த்திக்கடன்.

 
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி சிறுவர்கள் சிறுமிகள் மட்டும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் வாசலில் பூசணிப்பூ மாட்டுச் சாணத்தை  தினம்தோறும் சிறு குப்பிகளில் சேகரித்து தை மாதம் மூன்றாம் நாள் குப்பிகளில் ஆவாரம் பூவினை வைத்து அவர்களது கிராம தேவதையான உச்சி காளியம்மனின் கோவில் வீட்டிற்குள் இரவில் கொண்டு வந்து சிறப்பு பூஜை செய்தனர்.
 
அதன்பின் கிராம மக்கள் சிறுவர்கள் அனைவரும் இணைந்து கும்மி பாட்டுக்கு கும்மி அடித்து குலவை போட்டு ஆவாரம் பூ குப்பியினை தலையில் வைத்து  கிராமத்தின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று அச்சிறுவர்களே கோயில் குளத்தில் குப்பைகளை கரைத்து பின்னர் குளத்தில் நீர் எடுத்து கோவில் வீட்டிற்கு வந்து அபிஷேகம் செய்யும் வினோத திருவிழா நடைபெற்றது.
 
பல தலைமுறைகளாக தொடர்ந்து நடத்துவருகிறது இந்த வித்தியாசமான வினோதமான திருவிழாவினை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்து ஆச்சிரியத்துடன் பார்த்து சென்றனர்.