செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (14:29 IST)

2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி… புதைப்படிவம் கண்டுபிடிப்பு

2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளியின் புதைபடிவங்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நிபுணர் கண்டுபிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல்கலைகழக பேராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூஸிலாந்து தெற்கு பகுதிகளில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஒட்டாகோ என்னும் பகுதியில், 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழந்த ராட்சத கிளியின் புதைபடிவங்களை கண்டுபிடித்துள்ளார். அந்த கிளியின் உயரம் ஒரு மனிதனின் சராசரி உயரத்தின் பாதிக்கும் மேலானது என கூறப்படுகிறது. அதாவது 3 ½ அடி உயரத்தில் 7 கிலோ எடையில் இருந்திருக்கலாம் என அறியப்படுகிறது.

அந்த கிளிக்கு ”ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ்” என ஆய்வாளர்கள் பெயர் வைத்துள்ளனர். அதாவது கிரீக் நாட்டின் வலிமையான, அஜானுபாகுவான கடவுள் என கூறப்படும் “ஹெர்குளஸ்” என்ற பெயரின் அடிப்படையில் ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என பெயர் வைத்துள்ளதாக தெரியவருகிறது.

2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளியின், மாதிரி ஓவியம் ஒன்றை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். கடந்த 2010 ஆம் அண்டு 3 கிலோ எடை கொண்ட ”ககபோ” எனற கிளி, இதே நியூஸிலாந்து பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.