மெஷினில் சிக்கிய காலை வெட்டிக்கொண்ட விவசாயி!

america
Last Updated: செவ்வாய், 21 மே 2019 (14:53 IST)
அமெரிக்காவில் தானியக் கிடங்கு கொண்டு சேர்க்கும் மிஷினில் சிக்கிய விவசாயி ஒருவர், உயிர் பிழைக்க வேண்டி தனது காலை தானே வெட்டிகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு நெப்ரஸ்கா மாநிலத்தில் 63 வயதான கர்சேட் என்ற விவசாயி தனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சேகிப்பு கிடங்கில் சோளமணிகளை ஒரு கலனிருந்து இன்னொரு கலனுக்கு ஒரு பெரிய கன்வேயர் பெல்ட் போன்ற இயந்திரத்தின் மூலமாக மாற்ற முயற்சித்துள்ளார்.
 
அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் வளைந்த பிளேடுகளில் அவரது இடது கால் மாட்டிக்கொண்டது. ஆனால் அந்த சமயத்தில் யாரும் இல்லாத நிலையில் இயந்திரத்தை நிறுத்த இயலாமல் கடுமையான வலியால் துடித்துக் கதறியுள்ளார்.
 
அப்படிப்பட்ட நிலையில் சமயோஜிதமாக தனது கையில் இருந்த பிளேடால் தனது காலை வெட்டினார். அதனால் அவர் அந்த இயந்திரத்திலிருந்து காலை விடுவித்துக்கொண்டார்.
 
இந்நிலையில் ஆபத்தான சமயத்தில் சுயேட்சையாக  துணிந்து செயல்பட்ட விதம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :