ஹாலிவுட் நடிகர் அர்னால்டை எட்டி உதைத்த நபர் ! வைரலாகும் வீடியோ

arnold
Last Modified ஞாயிறு, 19 மே 2019 (17:49 IST)
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான  அர்னால்டை ஒருவர் பறந்துவந்து தாக்குவது போன்ற ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா எனும் ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் (71) பங்கேற்றார். அப்போது யாரும் எதிரிபாராத விதமாக அவரது முதுகுல் ஒருவர் பறந்துவந்து எட்டி உதைக்கிறார்.
 
அதன்பிறகு அர்னால்டின் பாதுகாவலர்கள் அந்த நபரைப் பிடித்து அங்கிருந்து வெளியேற்றினர்.
 
இந்த வீடியோ  காட்சியை அர்னால்டே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனக்கு நேர்ததற்க்காக வருத்தம் தெரிவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
 
பிடிபட்ட நபரை காவல்துறையினர் ஒப்படைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :