திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (09:23 IST)

செல்லப்பிராணியால் வந்த வினை - கால்களை இழந்த நபர்

அமெரிக்காவல் நபர் ஒருவர் வளர்த்து வந்த நாய் செல்லமாக அவரை நக்கியதால் நோய் தொற்று ஏற்பட்டு அவர் இரண்டு கால்களையும் இழக்க நேரிட்டுள்ளது.
பெரும்பாலானோர் வீட்டில் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். அது மனிதர்களை செல்லமாக நக்குகிறது. இதனை பெரும்பாலானோர் சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். அது என்ன தான் நமது செல்லப்பிராணியாக இருந்தாலும் கூட நாயுடன் சற்று விலகியே இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாத நபர் ஒருவர் கடும் இன்னல்களை சந்தித்துள்ளார்.
 
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியை சேர்ந்த க்ரெக் மண்டவுபெல் என்ற நபர் வீட்டில் நாயை வளர்த்துள்ளார். அது அவரை செல்லமாக நக்கும் போது, அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாளாக நாளாக அவருக்கு காய்ச்சல், வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையும் கண்டுகொள்ளாத அவருக்கு உடல் முழுவதும் புண் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நாய் நக்கியதால் அவர் உடல் முழுவதும் பதோகென் எனும் பாக்டீரியா கலந்துள்ளது. அவர் இரண்டு கால்களும் அவரது மூக்கும் பாக்டீரியாவால் அழுகியதால் அதனை நீக்க வேண்டியதாயிற்று. மூக்கு நீக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு இனியாவது மக்கள் செல்லப்பிராணியுடன் விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.