1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (17:52 IST)

வழி தவறிய எவுகணை; வானிலே வெடிக்க வைத்த அமெரிக்கா

அமெரிக்காவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின் போது வழி தவறியதால் பதற்றத்தில் வானிலே வைத்து அழிக்கப்பட்டது.

 
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள், கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை வைத்துள்ளன.
 
அண்மையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை மூலம் வடகொரியா அண்டை நாடுகளை மிரட்டி வந்தது.
 
குறிப்பாக ஜப்பான் மற்றும் அமெரிக்கா அகிய நாடுகள் பீதியில் இருந்தன. வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தக்கூடாது என்று அமெரிக்கா கடுமையாக கண்டித்தது.
 
ஆனால் வடகொரியா அடங்கவில்லை தொடர்ந்து சோதனை நடந்தி வந்தது. பின்னர் அமெரிக்காவும் எவுகணை சோதனையில் களமிறங்கியது.   
 
சில நாட்கள் அடங்கி இருந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்த தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவும் கண்டம் விட்டு கண்டம் பாயும் உயர் ரக ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.
 
ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிந்ததுடன் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.  மினிட்மேன் என்ற எவுகணையை அமெரிக்கா சோதனை செய்தது.
 
மினிட்மேன் 1 மற்றும் 2 ஏவுகணைகளில் சோதனை வெற்றியில் முடிய மினிட்மேன் 3 ஏவுகணை இலக்கு பாதையை நோக்கி செல்லாமல் தவறி வேறு வழியில் சென்றுள்ளது.
 
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் வேறு வழியில்லாமல் இந்த ஏவுகணை வானிலே வைத்து வெடிக்க வைக்கப்பட்டது.