வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj

சூரியனை விட அளவில் பெரிய கோளை விழுங்கும் கறுந்துளை ! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

நம் பூமியைத்தாண்டிய சூரியக் குடும்பத்திலும், பேரண்டத்திலும் எண்ணற்ற அதிசயங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன.

இவற்றைக் கண்காணிக்க உலகில் பல்வேறு நாடுகள் இணைந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள செயற்கைக் கோள் மற்றும் வளிமண்டத்திற்கு மேல் மிதக்கும் விண்வெளிக் கப்பல் ஆகியவற்றில் இருந்து சில ஆச்சர்யமாக தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சூரியனைவிட அளவில் மிகப்பெரிய கோளை விழுங்கு ஒரு கறுந்துளையை( hole)  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கறுந்துளையை படம் பிடித்துள்ள விஞ்ஞானிகள் இதற்கு ஸ்பாகெட்டிபிகேஷன் எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்தக் கறுந்துளை கண்டுபிடிப்பு அடுத்தக்கட்ட ஆராய்ச்சிக்குப் பயன்படும் எனக் கூறப்படுகிறது.