1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (22:06 IST)

அசாமில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பரவும் அபாயம் !

அசாம் உள்ளிட்டட மாநிலங்களில் மழை  பெய்து வரும்  நிலையில், ஜப்பானிய மூளை காய்ச்சல் எனப்படும் கொசுக்களால் உண்டாகும் வைரஸ் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

வடக்கில் அசாம்,  ராஜஸ்தான் உள்ளிட்ட மா நிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் கரைபுரண்டு    ஓடுகிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், மழையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எனப்படும் கொசுக்களால் பரவும் வைரஸின் பாதிப்புகள் பெருகி வருகிறது. இத்தொற்று  மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எளிதில் பரவும் எனக் கூறப்படுகிறது