1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 19 மார்ச் 2025 (07:16 IST)

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுவது குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
உச்சநீதிமன்ற அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் இணைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் இதற்காக ஆதார் நிபுணர்களுடன் தொழில்நுட்ப ஆலோசனை விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய குடிமக்களுக்கு மட்டுமே இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை வழங்க முடியும் எனவும், அதே நேரத்தில் ஆதார் அட்டை ஒரு நபரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதற்காக நிபுணர்களுடன் விரைவில் தொழில்நுட்ப ஆலோசனையை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஒருசில மாநிலங்களில் ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
 
இதுவரை வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு எந்தவித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மேலும், இணைக்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva