வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஜூலை 2022 (16:53 IST)

இலங்கைக்கான நிதியை நிறுத்த கோரிக்கை விடுத்தாரா ரணில்? விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்

ranil
தற்போது இலங்கை பிரதமராக இருக்கும் ரனில் விக்ரமசிங்கே கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை காண நிதியை நிறுத்த கோரிக்கை விடுத்ததாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே கடந்த 2007ஆம் ஆண்டு தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது
 
இதுகுறித்த நடைபெற்ற உரையாடல் தொடர்பான ஆவணத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரணில் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார உதவிகளை நிறுத்திக் கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது 
 
இதற்கு ஜப்பான் அளித்த பதிலில் இலங்கை நாட்டின் தலைவர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டு மக்களை புறக்கணிப்பதால் அதற்கான தண்டனையை அந்நாட்டு மக்கள் படக்கூடாது என்று பதிலளித்து இருந்தது.