வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (21:25 IST)

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சாய்னா நேவல் தோல்வி

saina
உலக  பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா  நேவல் தோல்வியடைந்தார்.

 ஜப்பான் நாட்டின் தலை நகர் டோக்கியோவில் 27 வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி   கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்கள் திறமையைக் காட்டி வருகின்றனர்.

இந்த தொடரில், 23 ஆம் தேதி  பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19,21-9 என்ற நேர்செட் கணக்கில் ஹாங்காங்கின் சியுங் நாகன் என்பவ்ரை தோற்கடித்து, 2 வது சுற்றில் நுழைந்தார்.

2 வது சுற்று நடக்கும் முன் ஜப்பான் வீராங்கனை நொசோமி காயம் காரணமாக விலகியதால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சாய்னா நேவால்,  தாய்லாந்து வீராங்கனை புசானன் உடன் மோதினார். இத்ல், புசானன் 21-17, 16-21,21-13 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தினார்.