1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (13:36 IST)

ரஷ்யா வீரர்கள் 9,116 பேர்களை கொன்றுவிட்டோம்: உக்ரைன் அரசு அறிவிப்பு

ரஷ்ய வீரர்கள் 9116 பேர்களை கொன்று விட்டோம் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 8 நாட்களாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் படைகளை நாட்டிற்குள் புகுந்து ராணுவ வீரர்கள் பொதுமக்கள் என சரமாரியாக கொன்று வருவதாக கூறப்படுகிறது. 
 
ஆனால் ரஷ்ய வீரர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் பதிலடி கொடுத்து வருவதாக கூறப்பட்ட நிலையில் ரஷ்ய வீரர்கள் 9111 பேர்களை கொன்று விட்டோம் என உக்ரைன்  அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் ரஷ்ய படைகளின் 251 டாங்கிகள், 33 போர் விமானம், 37 ஹெலிகாப்டர், 217 பீரங்கிகள், 939 பாதுகாப்பு கவச வாகனங்களை அழித்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது