ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (08:41 IST)

எங்களையும் சேத்துக்கோங்க..! – ஐரோப்பிய யூனியனுக்கு செல்லும் சோவியத் நாடுகள்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி முன்னாள் சோவியத் நாடுகள் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளன.

முன்னாள் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்தவை உக்ரைன், மால்டோவா, ஜார்ஜியா, பெலாரஸ் உள்ளிட்ட பல நாடுகள். 1990ல் சோவியத்திலிருந்து இந்த நாடுகள் பிரிந்து தனி நாடாக அங்கீகாரம் பெற்றன. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஆக்கிரமித்து வருகின்றது.

இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத முன்னாள் சோவியத் நாடுகள் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜார்ஜியா, மால்டோவா ஆகிய நாடுகள் ஐரோப்பிய யூனியனில் சேர விண்ணப்பித்துள்ளன. உக்ரைனும் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.