வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (19:01 IST)

உலகின் 800வது கோடி குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?

8 billion
உலகின் 800வது கோடி குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?
உலகின் மக்கள்தொகை 800 கோடி என ஆய்வு சமீபத்தில் அதிகாரபூர்வமாக ஐநா அறிவித்த நிலையில் 800 ஆவது கோடியின் குழந்தையின் பெயர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
இத்தாலியில் உள்ள ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் நவம்பர் 12-ஆம் தேதி பிறந்த குழந்தைதான் உலகின் 800வது கோடி குழந்தை என ஐநா அறிவித்துள்ளது 
இதனை அடுத்து உலக மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 800வது கோடி என்ற பெருமையைப் பெற்ற அந்த குழந்தைக்கு லியோனார்டோ என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர் 
 
உலக மக்கள் தொகை உயர்ந்த போதிலும் இத்தாலியின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக 800வது கோடியின் பெற்றோர் கூறியுள்ளனர்
 
Edited by Mahendran