குஜராத் தொங்கு பால விபத்து; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அதானி ரூ.5 கோடி!
குஜராத்தில் சமீபத்தில் நடந்து தொங்கு பால விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ அதானி நிறுவனம் முன்வந்துள்ளது.
குஜராத்தின் மொர்பி பகுதியில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் 135 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். 177 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசு இழப்பீடுகளை அறிவித்துள்ளன. இந்நிலையில் இந்த விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவ அதானி தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்த விபத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த 7 குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்த 12 குழந்தைகள் மற்றும் கணவரை இழந்த கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் ஒரு குழந்தை என மொத்தம் 20 குழந்தைகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்குவதற்கு அதானி தொண்டு நிறுவனம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Edit By Prasanth.K