திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (14:44 IST)

அம்மை நோய்க்கு 126 குழந்தைகள் பாதிப்பு.. 2 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!

patient
மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய்க்கு 126 குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அம்மை நோய் மிக வேகமாக பரவி வருவதாகவும் இதனை அடுத்து அம்மை நோயை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இதுவரை மகாராஷ்டிராவில் 126 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இரண்டு பேர் அம்மை நோய் பாதிப்பால் உயிர் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் மருத்துவமனையில் தற்போது 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு பேருக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அதிக நெருக்கடி, விழிப்புணர்வு இல்லாமை, அம்மை நோய் தடுப்பூசி தடுப்பு ஊசி போட தயக்கம் ஆகியவைதான் அம்மை நோய் பரவ காரணம் என்று மத்திய சுகாதார குழுவில் உள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது
 
Edited by Mahendran