1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (19:25 IST)

பிரபல ரவுடியை கொல்ல ’ஸ்கெட்ச் போட்ட கும்பல் ’ ... மடக்கிப் பிடித்த போலீஸ் ! பரபரப்பு சம்பவம்

பிரபல ரவுடியான பினுவின் ஆஸ்தான கூட்டாளியான பல்லு மதன் என்பவரை கொல்ல திட்டம் தீட்டியதாக, தேனாம்பேட்டை போலீஸார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவுவேளையில் , கே.பி. என் சந்திப்பில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு கார் அவ்வழியே வந்தது. அதிலிருந்த 4 பேர் மீது போலீசார் சந்தேம அடைந்தனர். அதை நிறுத்தினர். உடனே கார் உள்ளே இருந்து இருவர் தப்பி ஓடிவிட்டனர். 
 
ஆனால் வேளச்சேரி போலீஸார் இருவரையும் பிடித்தனர்.  பின்னர் காரை சோதனை செய்த போது, உள்ளே கத்தி, சுத்தியல், அரிவாள் ஆகிய ஆயுதங்கள் இருந்ததைக் கண்டுபிடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
 
முன்னர் தப்பி ஒடிய இருவரையும் போலீஸார் அடையாளம் கண்டுபிடித்தனர். அதில் இருவரும் ரவுடிகள் ( வெங்கடேஷ், சுரேஷ் )என்பது தெரிந்தது. இவர்கள் இரு நாட்களுக்கு முன் தேனாம்பேட்டையில் சிவப்பிரகாஷம் என்ற ரவுடியை  கொல்ல முயன்றதும் தெரிந்தது.
 
இந்நிலையில்  இவர்கள் இருவரிடமும் போலீஸார்  விசாரித்த போது, கந்துவட்டி தொழில் செய்துவரும் வெங்கடேஷுக்கு இடையூராக உள்ள பிரபல ரவுடி பல்லு மதனை கொலை செய்யும்  நோக்கில் வாகனத்தில் ஆயுதங்களை கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.