செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (20:06 IST)

கைதியுடன் டான்ஸ் ஆடும் போலீஸார் : பரவலாகும் ’ டிக் டாக் ’வீடியோ !

கேரள மாநிலத்தில் கைதியுடம் போலீஸார் டிக் டாக் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
இன்று சமூக வலைதளங்களில்  அனைத்து வயதினர்களும் தம் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இதில் சமீபத்தில் வரவான டிக் டாக் முன்னணியில் உள்ளது. ஒரு நிமிட வீடியோவில் தம்  எண்ணங்களை நினைத்த மாதிரி நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதால் அனைவரும் இதற்கு அடிமையாகிவருகின்றனர்.
 
இந்த டிக் டாக்கில் பதிவிடுவதாக விரைவில் புகழ்பெறு விடலாம் என்று நினைப்பதும் ஒருகாரண. இந்நிலையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த போலீஸார், ஒரு குற்றவாளியை அழைத்து செல்லும் போது அவர் ஆடுகிறார். அதற்கு போலீஸாரும் ஆடுகின்றனர்.பின்னால் ஒரு மலையாளப் பாடல் ஒலிக்கிறது.  இந்தக் காட்சி வீடியோவாக சமுகவலைதளங்களில் பரவலாகிவருகிறது. பணியில் இருக்கும் பொழுது போலீஸார் குற்றவாளியுடன் ஆடிய இந்த வீடியோ  அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.