5000 மாணவ, மாணவிகளுக்கு விஷம்: இரக்கமின்றி விசாரணை நடத்த ஈரான் தலைவர் உத்தரவு
ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு, ஹிஜாப் அணியாத விவகாரத்தில், இளம்பெண் மாஷாவை போலீஸார் கைது செய்தனர். அவர் மர்மமாக உயிரிழந்ததை அடுத்து, அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், போலீஸாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது. இந்த சம்பவத்தை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகளுக்கு விஷம் கொடுத்ததாக தகவல் வெளியானது.
ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் சுமார் 21 மாகாணங்களில் இந்த நிகழ்வு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது அரசின் கவனத்திற்குச் சென்ற நிலையில், இதுபற்றி, விசாரணை நடத்த விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு நேற்று வெளியிட்ட செய்தியில், 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மர்ம முறையில் விஸம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, ஈரான் நாட்டு தலைவர் அயோத்துலா அலி காமினேனி, இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, இது ஒருபோதும் மன்னிக்கவே முடியாத குற்றம். இரக்கமின்றி விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, இரான் அதிகாரிகள் முதன்முதலாக இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற உண்மை கண்டறியும் குழு உறுப்பினர் முகமது ஹாசன் அசாபாரி, 'ஈரானின் 230 பள்ளிகளைச் சேர்ந்த 5000 மாணவ, மாணவிகளுக்கு விஷம் பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக' ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், குஜிஸ்தான், மேற்கு அஜர்பைஜன்,பார்ஸ், அல்போர்ஜ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர்க்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.